search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுக்குமாடி குடியிருப்பு"

    • வெல்ஸ்பன் குழுமம் அடுக்குமாடி குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது.
    • இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.

    மும்பை:

    மும்பையின் ஓர்லி பகுதியில் தொழில் அதிபர்கள் வசிக்கும் சொகுசு பங்களாக்கள் உள்ளன.

    இங்குள்ள மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.

    இதனை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    வெல்ஸ்பன் குழுமம் இந்த குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்பின் கோபுரத்தில் 3 தளங்களில் பென்ட் ஹவுஸ் அமைந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக்குடியிருப்பினை ரூ.240 கோடிக்கு வெல்ஸ்பன் குழுமம் வாங்கி உள்ளது. இனி இந்த தளத்தில்தான் இக்குழுமம் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • குறைதீர்க்கும் நாளில் ஆதிதிராவிட மக்கள் மனு
    • கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மனு அளித்தனர். குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மரணம் அடைந்தால் அடக்கம் செய்வதற்காக காற்றாடி விளை பகுதியில் அமைந்து உள்ள சுடுகாட்டை 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    அங்கு சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் பல கல்லறைகளும் அமைந்து உள்ளன. இந்த நிலையில் கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    இதனால் ஆதிதிராவிடர் மக்கள் பாதிக்கப்படுவார் கள். எனவே அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 200 ஆண்டு களாக பயன்படுத்தி வரும் சுடுகாடு நிலத்தை ஆதி திராவிட மக்களுக்காக கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 10 மற்றும் 9-வது வார்டுக்குட்பட்ட நல்லாறு, செட்டிபாளையம் பகுதிகளில் 187 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் சென்னை நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படாததால் இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் ஆத்துப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நீர்ப்பாசனத்துறை உதவி பொறியாளர் நல்லதம்பி வரவேற்றார்.

    இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- நீதிமன்ற உத்தரவின்படி இந்த பகுதியில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும், இங்கு வசிக்கும் அனைவருக்கும் நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் 9 மற்றும் 10-வது வார்டுகளில் நீர்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும் அங்கு வசிப்பவர்களுக்கு அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.அந்த வீடுகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கான வங்கிக் கடன் வசதியையும் அதிகாரிகளே சுயஉதவிக்குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் திருப்பூர் வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • 5 ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம்-குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு.

    மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதற்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.

    புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது.

    ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடியேறாமல் உள்ளனர்.

    5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் மர்ம நபர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவருக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் இங்கு விபசாரமும் நடைபெறுவதாக சுற்றுவட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது.

    புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புனரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.12. 78 கோடி மதிப்பீட்டில் 156 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, குளியலறை, கழிவறை ஆகிய வசதியுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சர்க்கார் கண்ணாடிப்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் முபாரக் அலி ,ஒன்றிய குழு தலைவர் காவியா ,பேரூராட்சி தலைவர் கலைவாணி ,துணைத் தலைவர் ரங்கநாதன் ,மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ,பேரூர் செயலாளர்கள் பாலமுருகன், சாதிக் அலி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.
    • மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

    அவிநாசி :

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி, சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு பலரும் குடியேறிவிட்டனர்.

    திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.இருப்பினும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற்றுத்தருவதாக கூறி சில அரசியல் கட்சியினர், தனி நபர்கள் சிலர் மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

    இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பூண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ,வீரபாண்டி, திருக்குமரன் நகர், பாரதி நகர், ஜெயா நகர், பூண்டி, அவிநாசியில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 3,744 வீடுகளுக்கும், மாவட்ட கலெக்டர் மற்றும் வாரியத்தின் ஒப்புதலுடன், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.புதிதாக மனுக்கள் எதுவும் பெறப்படாது என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.அவிநாசி சூளையில் அடுக்குமாடி குயிருப்பு உள்ள இடத்துக்கு, சோலை நகர் எனவும், திருமுருகன்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்துக்கு, பூண்டி நகர் எனவும் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தினர் பெயர் சூட்டியுள்ளனர்.

    • டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். தற்காலிக ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத் தொடா்ந்து சங்கத்தின் புதிய தலைவராக பி .சுப்பிரமணியம், செயலாளராக லோகநாதன், பொருளாளராக விஜயராணி, துணைத் தலைவராக ஆனந்தன், துணைச் செயலாளராக வீரன் உள்பட 16 போ் கொண்ட கமிட்டி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

    சிஐடியூ. மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட நிா்வாகிகள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வோர்லி பிரபாதேவி பகுதியில் உள்ள பியூமோண்டே டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. #BeaumondeTowers
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பிரபாதேவி பகுதியில் உள்ள பியூமோண்டே டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் பி பிரிவின் 33வது மாடியில் இருக்கும் ஒரு வீட்டில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. 

    தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 95 வீடுகளில் உள்ளவர்கள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகை தீபிகா படுகோனேவுக்கு சொந்தமான வீடு ஒன்று இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 
    ×